அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
த்ரிஷா நடித்துள்ள படம் பரமபத விளையாட்டு. அவருடன் நந்தா, ரிச்சர்டு, வேல ராமமூர்த்தி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படத்தை வெளியிடும் ஓடிடி நிறுவனம், த்ரிஷாவை வைத்து படத்திற்கு புரமோசன் செய்யுமாறு கேட்டுள்ளது.
இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான திருஞானம், திரிஷாவை அணுகியுள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் கொடுத்துள்ளார் திருஞகானம். புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதை தொடர்ந்து த்ரிஷா தற்போது படத்தின் புரமோசன் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறாராம்.