சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு |
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று அறிவிக்கப்பட்டதுமே உலகம் முழுக்க உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டது. 10 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக பல நாடுகளில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் தியேட்டருக்கு வரவில்லை. இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவான ஹாலிவுட் படங்கள் தியேட்டருக்கு வருவதற்கு தயக்கம் காட்டி வந்தன.
இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான காஸ்சிலா வெர்சஸ் காங் படம் உலகம் முழுக்க தியேட்டரில் வெளியாகி வசூலை குவித்தது. இதனால் மக்கள் தியேட்டருக்கு வருவதை உறுதி செய்து கொண்ட ஹாலிவுட் படங்கள் வெளியாகத் தயாராகி வந்தது. பிளாக் விடோ, வொண்டர் உமன், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவரத் தயாரானது.
தற்போது கொரோனாவின் 2வது அலை உலகம் முழுக்க தீவிராக பரவத் தொடங்கி உள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாரான படங்கள் மீண்டும் பின்வாங்க தொடங்கி உள்ளது.
டாம் க்ரூஸ் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம் டாப் கன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 34 வருடங்களுடக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவிருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் படம் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிப் போனது. கொரோனா தொற்று குறையாததால் மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ஆண்டும் டாம் க்ரூஸ் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நவம்பர் 19ஆம் தேதிக்கு படம் ஒத்திவைக்கப்படுவதாக பாராமவுண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல டாம் க்ரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாஸிபில் 7 படம் 2022ஆம் ஆண்டு மே மாதமும், மிஷன் இம்பாஸிபிள் 8 2023ஆம் ஆண்டு ஜூலை மாதமும் தள்ளிவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.