எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் ஏன் வரவில்லை என்பது குறித்து கேட்டால் 'படம் நன்றாக இல்லை, அதனால் தான் வரவில்லை' என்பதைத்தான் பொதுவான கருத்தாக வைப்பார்கள். முன்பெல்லாம் சிறிய பட்ஜெட் படங்களும், சுமாரான படங்களும் கூட ஓரளவிற்கு வசூலித்து நஷ்டத்திலிருந்து தப்பித்துவிடும்.
கொரோனா காலத்தில் கடந்த ஒரு வருடத்தில் பல தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்குக் காரணம் படங்களின் தரம் தான் என்பது பற்றித்தான் பேசுவார்களே தவிர, தியேட்டர்களின் கட்டணம், திண்பண்டங்களின் விலையைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.
நமது பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருக்கும் டிக்கெட் கட்டணத்தையும், நமது மாநிலத்தின் டிக்கெட் கட்டணத்தையும் பார்த்தால் உங்களுக்கு பேரதிர்ச்சி வரும். ஆந்திராவில் தெலுங்குப் படங்களுக்கு எப்படி இவ்வளவு ரசிகர்கள் வருகிறார்கள் என்பதற்கான காரணம் அவர்களின் சினிமா டிக்கெட் கட்டணத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
ஆந்திராவில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய், அதிக பட்ச கட்டணம் 250 ரூபாய். கடந்த வாரம் சினிமா தியேட்டர்களின் கட்டணத்தை அரசு அனுமதித்ததற்கு மீறி வசூலிக்கக் கூடாது என ஆந்திர அரசு உத்தரவிட்டது. சிறப்புக் காட்சிகளுக்குக் கூட அனுமதி மறுத்தது.
மல்டிபிளக்ஸ் தவிர்த்து மற்ற மாநகர, நகர்ப்புற தியேட்டர்களில் அதிக பட்ச டிக்கெட் கட்டணம் ஏசி தியேட்டர்களில் 70 ரூபாய் மட்டுமே. ஆனால், தமிழ்நாட்டில் அந்தக் கட்டணம் 150 ரூபாய். சில ஊர்களில் அதற்கு மேலும் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணம் 15 ரூபாய். கிராமப் புறங்களில் ஏசி தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாய், அதிக பட்ச கட்டணம் 20 ரூபாய்தான்.
மேலும், அங்குள்ள சினிமா தியேட்டர்களில் ஐஸ் க்ரீம், பாப்கார்ன் ஆகியவை அதிகபட்சமாக 50 ரூபாய்க்குத்தான் விற்கப்படுகிறதாம்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே டிக்கெட் கட்டணங்களும், தின்பண்டங்களின் கட்டணமும் அதிகமாம். ஆனால், ஆந்திராவில் மல்டிபிளக்ஸ் அல்லாத தியேட்டர்களில்தான் பெரும்பாலான ரசிகர்கள் அதிகமாகப் படம் பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் ஆந்திராவைப் போல் அமையாதா என இங்குள்ள ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி நிர்ணயம் செய்தால்தான் மக்களும் அதிக அளவில் வருவார்கள், இல்லையேல் அவர்கள் ஓடிடி பக்கம் இன்னும் அதிகமாகப் போவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழ்த் திரையுலகமும் தியேட்டர்காரர்களும் இப்போதாவது விழித்துக் கொள்வது நல்லது.