மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
கடந்த 6ந் தேதி நடந்த சட்டசபை தேர்தல் ஓட்டுபதிவின் போது நடிகர் விஜய் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓட்டுச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆனது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக் காட்டவே அவர் சைக்கிளில் வந்தார். அவர் ஓட்டி வந்த சைக்கிள் நிறத்தை வைத்து அவர் இந்த கட்சிக்குதான் ஓட்டு போட்டிருப்பார் என்று ஆளாளுக்கு தங்கள் கற்பனை குதிரைகளை தட்டிவிட்டார்கள்.
இதன் அடுத்தகட்டமாக விஜய் ஓட்டிவந்த சைக்கிள் பற்றிய விபரங்களை தோண்டி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள் அவர் ஓட்டி வந்தது டிஐ என்ற நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதன் விலை 22 ஆயிரத்து 800 ரூபாய் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது உடற்பயிற்சி மற்றும் பயணம் இரண்டுக்கும் சேர்த்து வடிவமைக்கப்பட்டது.
அதோடு சைக்கிள் நிறுவனம் தனது சைக்கிளை விளம்பரப்படுத்த விஜய்யுடன் இணைந்து நடத்திய பப்ளிசிட்டி திட்டம் என்று இப்போது புதிதாக ஒன்றை கிளப்பி விட்டிருக்கிறார்கள். எது உண்மை என்று விஜய்க்கு மட்டுமே தெரியும்.