12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
பழம்பெரும் தெலுங்கு இயக்குனர் விஜயேந்திர பிரசாத். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை. அர்த்தங்கி, ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீவள்ளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஏகப்பட்ட தெலுங்கு படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
மகன் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் கதையை எழுதியது இவர் தான். இதுதவிர ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி, ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையான மணிகர்னிகாவுக்கும், இவர்தான கதை எழுதியுள்ளார்.
70 வயதை தாண்டிய விஜயேந்திர பிரசாத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலத்தில் தன்னோடு பழகியவர்களையும் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.