பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கார்த்தி, ராஷ்மிகா ஸ்பந்தனா நடித்த சுல்தான் படம் சமீபத்தில் வெளிவந்தது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருந்நதார். இந்த படத்திற்கு இருவிதமான விமர்சனங்கள் வந்தபோதும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்திற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு படத்தின் எடிட்டர் ரூபன் பேசியதாவது: 100 பேரை வைத்துக் கொண்டு தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. அதை பிரமாண்டமாக சிறப்பாக தயாரித்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு. மேலும், சிறு படங்கள் கூட ஓடிடியில் வெளியிடும்போது, மீண்டும் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி.
இப்படத்திற்கு கொரோனா பீதியிலும், குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து செல்கிறார்கள் என்று செய்திகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளன, குறைக்க வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் சொன்னார்கள். அதனால் குறைத்து வெளியிட்டோம். சில விமர்சகர்கள் உபயோகித்த வார்த்தைகளில் வன்முறை மிக அதிகமாக இருந்தது. அது ரொம்பவே காயப்படுத்தியது. அதை எப்படி எடிட் செய்து நீக்குவது என்று தெரியவில்லை.
எனக்கு எனது அம்மாவைப் பிடிக்கும் அளவுக்கு சினிமாவையும் பிடிக்கும். எங்க அம்மா எப்படி நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேனோ, அதேபோல் சினிமாவும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வார்த்தைகளில் வன்மத்தைக் குறைத்துக்கொண்டு குறைகளைச் சொல்லுங்கள். குறைகளையே சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. அடியுங்கள். ஆனால், கையைக் கழுவிவிட்டு அடியுங்கள்.
இவ்வாறு எடிட்டர் ரூபன் பேசினார்.