ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஒவ்வொரு முன்னணி நடிகரும் தங்களுக்கென்று தனியான ஸ்டைலிஸ்டுகளை நியமித்துக் கொள்வார்கள். இவர்கள்தான் அந்த நடிகர்கள் எந்த மாதிரியான உடை அணிய வேண்டும். எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த மாதிரியான செருப்பு அணிய வேண்டும் என்பது வரை முடிவு செய்கிறவர்கள் ஸ்டைலிஸ்டுகள் தான். அந்த வரிசையில் பிரபு தேவாவின் ஸ்டைலிஸ்டாக கடந்த 7 வருடமாக பணியாற்றி வருகிறவர் ஜாவி தாகூர்.
பஹீரா படத்தில் பிரபுதேவா 10 தோற்றத்தில் வருகிறார். அதனை வடிவமைப்பவர் ஜாவி தாகூர். இது குறித்து அவர் கூறியதாவது: நான் புதுமையாக பல விசயங்களை முயற்சித்து பார்க்க பெருந்தன்மையுடன் இடம் தந்த இயக்குநர் ஆதிக்கிற்கு நன்றி. இப்படத்தில் பிரபுதேவா ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட, 10 விதமான தோற்றங்களில் தோன்றுகிறார். ஒவ்வொரு தோற்றமும் அதற்குரிய தனித்தன்மையுடன் தெரியும்படி வடிவமைத்தோம்.
ஒவ்வொரு பாத்திரத்தின் தோற்றத்தை, வடிவமைத்தது மிக சவாலானாதாக இருந்தது. இறுதியாக இப்போது டீஸருக்கு குவிந்து வரும் பாராட்டுகள், பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பிரபுதேவாவுடன் பணியாற்றுவது எப்போதும் அலாதியான அனுபவம். சவாலான பணியாக இருந்தாலும் இனிமையான அனுபவமாக இப்படம் இருந்தது.
பஹீரா தவிர்த்து தேவி, யங் மங் சங், லக்ஷ்மி மற்றும் குலேபகாவலி படங்களிலும் பிரபுதேவாவிற்கு ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிகிறேன். யங் மங் சங் படத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராக பிரபுதேவா நடித்துள்ளார். அப்படத்தில் அவரின் தோற்றத்தை வடிவமைக்கும் பொருட்டு நிறைய ஆராய்ச்சிகள் செய்தோம். குறிப்பிட்ட காலத்தில் சைனாவில் நிலவிய ஸ்டைலை அவருக்காக வடிவமைத்தோம்.
பிரபுதேவா தவிர்த்து தமிழில் ஆர் ஜே பாலாஜி மற்றும் அஷ்வின் ஆகியோருக்கும் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறேன். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். என்றார்.




