ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
வலிமை அப்டேட் என்ற வாசகம் கடந்த சில வாரங்களாகவே பல இடங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரதமர் மோடியின் சென்னை விஜயம், உள்ளிட்ட இடங்களில் சில ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எனக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
பின்னர், அஜித் தரப்பிலிருந்து அறிக்கை விட்டும், அஜித் ரசிகர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. நேற்று அஜித் ரசிகர் ஒருவர் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை டுவிட்டரில் டேக் செய்து வலிமை அப்டேட் எப்ப எனக் கேட்டுள்ளார். அதற்கு வானதி சீனிவாசன், “நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி” என பதிலளித்திருந்தார்.
இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் அஜித் ரசிகர்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நினைத்துவிட்டார் போலும். தற்போது, “முதல் பார்வை மற்றும் வலிமை படத்தின் பிரமோஷன்ஸ் அஜித்குமாரின் 50வது பிறந்தநாளான மே 1 முதல் ஆரம்பமாகும்,” என அறிவித்துவிட்டார்.
இனி, வலிமை அப்டேட் பற்றி அஜித் ரசிகர்கள் கேட்க மாட்டார்கள் என்பது உறுதி.