பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மங்காத்தா'.
தற்போது தியேட்டர்களில் வரும் சிறிய படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்கள் பக்கம் வராததால் பழைய திரைப்படங்களைத் தேடிப் பிடித்து திரையிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் கடந்த வாரம் அஜித், நயன்தாரா நடித்த 'பில்லா' படத்தைத் தியேட்டர்களில் திரையிட்டார்கள்.
இப்போது 'மங்காத்தா' படத்தை தியேட்டர்களில் மீண்டும் திரையிட வேண்டுமென அதன் இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளர் தயாநிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“வர மே 1ம் தேதி தல 50, அதனால நம்ம தல 50வது படமான 'மங்காத்தா'வை உங்க இன்புளூயன்ஸ் யூஸ் பண்ணி ஏப்ரல் 30ம் தேதி ரிலீஸ் பண்ணா ரசிகர்கள் நாங்க, உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருப்போம், பாத்து செய்யுங்க,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது கோரிக்கைக்கு அஜித் ரசிகர்கள், வெங்கட் பிரபுவின் குழுவைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.