லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பிற்குச் சென்று கலந்து கொண்ட விஷால் ஒரே ஒரு நாள் மட்டும் கலந்து கொண்டுவிட்டு அதன் பிறகு மூன்று நாட்கள் வரை எஸ்கேப் ஆகிவிட்டாராம். அவரை மொபைல் போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
மூன்று நாட்கள் கழித்து வந்தவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறாராம். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்த போதும் இதே போல்தான் சொல்லாமல் கொள்ளாமல் சில நாட்கள் எங்கோ காணாமல் போய்விட்டார். விஷாலும் ஒரு தயாரிப்பாளர்தான், இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்தான். அவரே இப்படி நடந்து கொள்வது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
விஷால் நடித்து வெளிவந்த 'சக்ரா' படம் இன்று 25 நாளைத் தொட்டாலும் இந்தப் படத்தால் விஷாலுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். அவர் நம்பியிருக்கும் ஒரே படமான 'எனிமி' படத்திற்கும் அவரே எனிமி ஆகாமல் இருந்தால் தான் அவருக்கு நல்லது என்கிறது திரையுலக வட்டாரம்.