லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வெளியாகி உள்ளன. அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகும் லாபம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், லாபம் படத்திற்கான எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன் நேற்று வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். அவரை மீட்ட அவரது உதவியாளர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.