ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஷாம் - அருண் விஜய் கதாநாயகர்களாக நடித்த இயற்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சமீபத்தில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். முதல் படமே தேசிய விருது வாங்கியது. இத்தனை வருடங்களில் குறைந்த அளவு படங்களையே இயக்கி இருந்தாலும் அவற்றை சமூக நோக்கில், அதேசமயம் ரசிகர்கள் விரும்பும் படங்களாக கொடுத்தவர் தான் ஜனநாதன். கடைசியாக விஜய்சேதுபதி நடிப்பில் லாபம் என்கிற படத்தை இயக்கி முடித்து ரிலீஸுக்கும் தயார் செய்து விட்டுத்தான் மறைந்துள்ளார் ஜனநாதன்.
இன்று(மே 7) அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது முதல் பட ஹீரோக்களில் ஒருவரான ஷாம், தாங்கள் இருவரும் அடுத்ததாக இயற்கை-2 படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்ததாக ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷாம் கூறுகையில், “இயக்குனர் ஜனந்தனின் மறைவு திரையுலகத்துக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு தான்.. லாபம் படத்தை முடித்த பின்னர் இயற்கை 2 படத்தை ஆரம்பிக்கலாம் என பேசி வந்தோம். பிஜி அல்லது நார்வேயில் படப்பிடிப்பை நடத்தலாம் என்று தீர்மானித்திருந்தோம்” என கூறியுள்ளார்.