ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.. இருந்தாலும் தமிழில் ஒரு நீண்ட தயக்கத்துக்கு பின்னர், கடந்த 2019ல் அசுரன் படம் மூலம் நுழைந்தவருக்கு அந்தப்படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில் முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் மஞ்சு வாரியர்.
மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடித்து இன்று(மார்ச் 11) வெளியாகியுள்ள 'தி பிரிஸ்ட்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியும் உள்ளார். இந்தியில் அறிமுகமாகும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியார். அறிமுக இயக்குனர் கல்பேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.