லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
2018ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.
இந்த படம் மலையாளத்தில் ப்ரம்மம் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதனை ரவி கே.சந்திரன் இயக்கி வருகிறார். இதில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ராதிகா ஆப்தே நடித்த கேரக்டரில் நடிப்பதாக இருந்த அஹானா திடீரென நீக்கப்பட்டார். அவரது தந்தையும் நடிகருமான கிருஷ்ணகுமார் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதன் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இதனை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக படத்தை தயாரித்து வரும் ஓபன் புரொடக்ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு குறித்த விவகாரங்களில் எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லை . நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முழுக்க முழுக்க இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் ஆகியோரது முடிவு சார்ந்தது.
இப்படத்துக்காக நாங்கள் அஹானைவை தேர்வு செய்ய விரும்பியது உண்மை. ஆனால் ஒத்திகைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதையும் முன்பே அவரிடம் தெரிவித்து விட்டோம். நாங்கள் அவருக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்திருந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை இது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தோம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், அவர் வேறு ஒரு படத்தில் பணிபுரிந்து வந்ததாலும் ஒத்திகை தாமதமானது. ஒருவழியாக நாங்கள் போட்டோ ஷூட் நடத்திய போது, அவர் இந்த பாத்திரத்துக்கு பொருந்தமாட்டார் என்று இயக்குநர் கருதியதால் நாங்கள் அவரிடம் மன்னிப்பு கோரி மீண்டும் இன்னொரு படத்தில் பணிபுரியலாம் என்று அவரிடம் கூறினோம். இவை அனைத்தும் அஹானாவிடம் சரியான நேரத்தில் தெரியப்படுத்தப்பட்டது,. இதில் எந்த ஒரு அரசியல் காரணமும் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.