பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி, மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர். அந்த கட்சியின் மாநாடுகளில் பேசி இருக்கிறார். நண்பர்கள் சிலருக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார். ஆனால் நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை. ஆனால் இந்த முறை அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக மலையாள ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனை மம்முட்டி மறுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் நான் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளிவருவது வழக்கமான ஒன்றுதான். நான் அதை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. அதுபற்றி எந்த கருத்தும் சொல்வதில்லை. நான் தீவிர அரசியலில் இப்போதைக்கு ஈடுபடப்போவதில்லை. அதனால் தேர்தலில் போட்டியிடப்போவதுமில்லை.
இதுவரை எந்த அரசியல் கட்சியும் என்னை போட்டியிடச் சொல்லி கேட்கவில்லை. பிற்காலத்தில் அரசியலுக்கு வருவேனா தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். நான் சினிமாவில் செய்து கொண்டிருப்பதும் அரசியல் தான். அதை இன்னும் தீவிரமாக செய்வேன். என்றார்.