டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. அவருக்கும் நடிகை சாயிஷாவுக்கும் 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. அதற்கு முன்பே அவர்கள் இருவரும் 'கஜினிகாந்த்' படத்தில் சேர்ந்து நடித்திருந்தாலும் அந்த சமயத்தில் அவர்கள் காதல் வெளியில் தெரியவில்லை. 'காப்பான்' படப்பிடிப்பு சமயத்தில் தான் அவர்கள் காதல் செய்தி வெளியில் வந்தது.
அப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே 2019ம் வருடம் மார்ச் மாதம் 10ம் தேதி இருவரும் ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இன்று இருவரும் தங்களது மூன்றாவது திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் சாயிஷா நடித்து வருகிறார். அவரும் ஆர்யாவும் சேர்ந்து நடித்துள்ளள 'டெடி' படம் நாளை மறுநாள் ஓடிடி தளத்தில் வருகிறது. சாயிஷா கன்னடத்தில் நடித்துள்ள 'யுவரத்னா' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு, “எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆக்குவதற்கு நன்றி, இனிய திருமண நாள் வாழ்த்துகள் மனைவியே,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஆர்யா. அதற்கு பதிலளித்துள்ள சாயிஷா, “உங்களை இப்போதும் எப்போதும் நேசிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
'கஜினிகாந்த்' படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆர்யா, சாயிஷா இருவரும் முதன் முதலாக சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.




