டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காணாமல் போயிருந்த சாதிய படங்கள் பா.ரஞ்சித் இயக்குனராக வந்த பிறகு மீண்டும் மறைமுகமாக தலைதூக்க ஆரம்பித்தது. அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் அப்படியான காட்சிகள், வசனங்களைப் பார்க்கலாம்.
அதற்கு எதிர்வினையாற்றும் விதத்தில் 'திரௌபதி' என்ற படத்தை இயக்குனர் மோகன் வெளியிட்டு அவரும் சினிமாவில் சாதிய மோதலை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத்திலிருந்து 'திரௌபதி முத்தம்' என்ற பாடலை நாளை(மார்ச் 11) வெளியிட உள்ளதாக அறிவித்தார்கள். அதற்கு பல ரசிகர்கள் டுவிட்டர் தளத்தில் 'திரௌபதி' பட இயக்குனர் மோகனை டேக் செய்து விமர்சித்தார்கள்.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக மோகன் டுவிட்டரில், அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்..அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள்..” என கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சமூக வலைத்தளத்தில் மோகன் டுவிட்டர் கணக்கில் கமெண்ட்டுகள் என்ற பெயரில் சாதிய மோதல் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.




