டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ்த் திரையுலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் சிம்ரன். அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்ளில் கதாநாயகியாக நடித்தவர். ரஜினிகாந்துடன் மட்டும் நடிக்காமல் இருந்தார். அது இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்பராஜ் 'பேட்ட' படம் மூலமும் நிறைவேறியது.
தற்போது மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ள விக்ரமின் 60வது படத்தில் சிம்ரன் நடிக்கிறார். ஏற்கெனவே விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துள்ளார். அப்படம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் உள்ளது.
மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும், விக்ரமுடனும் நடிப்பது பற்றி சிம்ரன், “மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பது அபூர்வமான வாய்ப்பு. விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோருடன் விக்ரம் 60 படத்தில் இணைவது மிகவும் மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படம் தவிர்த்து பிரஷாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்திலும் நடிக்கிறார் சிம்ரன். இப்படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகி உள்ளது.




