துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ்நாட்டில் டிவி பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு முகம் 'சரவணா ஸ்டோர்ஸ்' விளம்பரத்தில் வரும் சரவணன். விதவிதமான விளம்பரங்கள் மூலம் நடிகர்களுக்கே சவால் விடும் அளவிற்கு ஸ்டைலாக நடித்தவர்.
அவர் கதாநாயகனாக நடித்து வரும் புதி படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம். ஒரு ஆக்ஷன் காட்சியில் வில்லன் நடிகர் பெசன்ட் நகர் ரவியை அவர் அடித்து வீழ்த்திய காட்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம், இந்த ஆண்டு நிச்சயம் வெளிவந்துவிடும். ஜேடி ஜெர்ரி இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கீத்திகா திவாரி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
பல கோடி ரூபாய் செலவில் இப்படம் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறதாம். ஏற்கெனவே, பாடல் காட்சிகளுக்கே சில பல கோடி செலவு செய்து படமாக்கியதாகத் தகவல் வெளியானது. முன்னணி நடிகர்களின் படங்களைப் போலவே இப்படம் பிரம்மாண்டமாய் இருக்கும் எனப் படக்குழுவில் தெரிவிக்கிறார்கள்.