நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

டாக்டர், அயலான் படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் தற்போது விஜய்யின் 65ஆவது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் கல்யாண வயசு என்றொரு பாடலை எழுதியிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த பாடல் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் தான் நடித்துள்ள டாக்டர் படத்திலும் சோ பேபி, செல்லம்மா என இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65ஆவது படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதயிருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களுக்கு இசையமைத்த அனிருத்தே விஜய் 65ஆவது படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.