டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் நிரஞ்சனி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் தான் நிரஞ்சனி.
ஆடை வடிவமைப்பாளரான நிரஞ்சனி, டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இடையே காதல் ஏற்பட்டது. சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தனது தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தார் நிரஞ்சனி. இந்த போட்டோவை அகத்தியனின் மூத்த மகளும் நடிகையுமான விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த போட்டோக்கள் வைரலானது.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி, நிரஞ்சனியின் திருமணம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகை சேர்ந்த பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.