சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
ஒரு பணக்கார இளைஞன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் ஒரு கர்நாடக இசை குடும்பத்தை சார்ந்த பெண்ணை காதலிக்கிறான். மகனின் காதலை பற்றி தெரிந்த இளைஞனின் தந்தை அவர்களின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார். இந்நிலையில் இசைக் கச்சேரிக்காக கதாநாயகி தனது தாயுடன் கோவா செல்ல, அங்கு கதாநாயகி கடத்தப்படுகிறார்.
நாயகன் நாயகியை கடத்தல் கும்பலிடமிருந்து கண்டுபிடிக்க முயல பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இறுதியில் வென்றது யார் என்பதை விறுவிறுப்பான முறையில் விவரிக்கிறது ஹம்சஹர்ஷா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட், வழங்கும் 'நின்று கொல்வான்'. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா ஆகிய மும்மொழிகளில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இயக்கியுள்ளார் வி பி சங்கர். படத்தில், அர்ஜூன் சந்த்ரா,கருணா டோக்ரா, யோகி பாபு, ஆஷிஷ் வித்யார்த்தி, 'புது புது அர்த்தங்கள்' புகழ் கீதா, 'நிழல்கள்' ரவி, ராஜீவ் பிள்ளை மற்றும் பவித்ரா லோகேஷ், ஆகியோர் நடித்துள்ளனர்.
பாடல்களை வைரமுத்து இயற்றியுள்ளார். படத்திற்கு ஜூடா சாண்டி இசையமைத்துள்ளார். பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. சண்டைக் காட்சிகளை விஜய், 'பயர்' கார்த்தி வடிவமைக்க, திருபுவன் மற்றும் மனு நடன இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள். ஒளிப்பதிவை ஜி்.பாலமுருகன் மேற்கொண்டுள்ளார்.
படத்தொகுப்பை என்.எம்.விஸ்வா கவனிக்க, தயாரிப்பு நிர்வாகத்தை மஞ்சுநாத் மேற்கொள்கிறார். மக்கள் தொடர்பு அலுவலராக நிகில் முருகன் செயல்படுகிறார். வடிவமைப்பை அகிலனும், ஒலி அமைப்பை சேதுவும் கவனிக்கின்றனர்.
மிக அதிக பொருட் செலவில் சென்னை, கோவா, உடுப்பி, பெங்களூர், மைசூர், மடிகேரி, குசால்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 'நின்று கொல்வான்' படமாகியுள்ளது. படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியிடப்பட்டு பிரபலம் அடைந்த நிலையில் விரைவில் ஆடியோ வெளியாகவிருக்கிறது. 'நின்று கொல்வான்' திரைப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.