நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த வரும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஒரு சண்டை காட்சி மட்டும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது. அத்தோடு பூசணிக்காய் உடைக்கப்பட்டு விடும். அதையடுத்து வலிமை படத்தின் அப்டேட்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் கலந்து கொண்டார் அஜீத். இந்நிலையில் தற்போது வலிமை படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றபோது அங்குள்ள சாலைகளில் தனது நண்பர்களுடன் மாஸ்க் அணிந்த நிலையில், அஜீத் சைக்கிளிங் செய்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு சாலையோரத்தில் சைக்கிளுடன் நின்றபடி அவர்கள் டீ குடிக்கும் புகைப் படங்களும் வெளியாகியுள்ளன.