ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா நடிப்பில் இயக்கியுள்ள படம் பஹீரா. இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெண்களை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கும் ஒரு அதிரடியான சைக்கோ கொலையாளி வேடத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா. இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முறையாக நெகட்டிவ் ரோலில் பிரபுதேவா மிரட்டலாக நடித்துள்ள இந்த படத்தில் அமைரா தஸ்துர், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சங்கர் உள்ளிட்ட நடிகைகள் நாயகிகளாக நடித்துள்ளனர்.




