துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் மாதம் நடைபெறும். அதன்படி கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய 18வது திரைப்பட விழா கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த விழா நேற்று சென்னையில் தொடங்கியது.
விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் தாணு, இந்திய திரைப்பட திறனாய்வு குழு பொதுச் செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பர் தலைவர் காட்டகர பிரசாத், செயலாளர் ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி, சுகன்யா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கலாச்சார தூதர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சென்னையிலுள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (சத்யம் சினிமாஸ் - சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரின் அரங்குகள்) மற்றும் காசினோ திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. தொடக்க விழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் 'தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்' என்ற படம் திரையிடப்பட்டது.
இந்த விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் லேபர், கல்தா, சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் இஸ் ஆனந்தன், காட்பாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, சீயான்கள், சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம், கன்னி மாடம் ஆகிய 13 படங்கள் திரையிடப்படுகிறது.