ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சசிகுமார் படங்கள் என்றால் ஒன்று நட்பை பேசும் இல்லாவிட்டால் கூட்டு குடும்ப பிரச்னைகளை பேசும். இதில் இரண்டாவது வரிசையில் வருகிறது ராஜவம்சம். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இவர் இயக்குனர் சுந்தர்.சியின் உதவியாளர். அதனால் அவரைப்போலவே பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்து படத்தை இயக்கி உள்ளார்.
சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இவர்களுடன் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி, மணி சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார். வருகிற மார்ச் 12ம் தேதி வெளிவருகிறது.