ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
2021ஆம் வருடத்திற்கான கேரள சர்வதேச திரைப்பட விழா நேற்று சம்பிரதாய துவக்க விழா பூஜையுடன் துவங்கியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் தன்னை அழைக்காமல் விழாக்குழுவினர் அவமதித்து விட்டார்கள் என தேசிய விருதுபெற்ற பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம்குமார் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வயதானவன் என காரணம் காட்டி இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பாமல் அவமரியாதை செய்துள்ளனர். என்னைவிட ஓரிரு வயதே குறைவான, கல்லூரியில் எனது ஜூனியர்களாக படித்த இயக்குனர் அமல் நீரத், ஆஷிக் அபு ஆகியோரை எல்லாம் அனுமதித்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால், தேசிய விருது பெற்ற எனக்குத்தான் இந்த விழாவில் கலந்துகொள்ள அதிக உரிமை இருக்கிறது. என்ன செய்வது இங்கேயும் அரசியல் நுழைந்து விட்டது” என வருத்தத்துடன் கூறியுள்ளார் சலீம்குமார்.