ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சிறிய படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். பிக் பாசுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வருகிறது. சமீபத்தில் அவர் ஷ்ஷ்... என்ற வெப் தொடரில் நடித்தார். இதற்காக 13 கிலோ வரை எடை குறைத்துள்ளார்.
இதுதவிர தற்போது 7 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் அலேகா, பப்ஜி, கூடவன், கன்னி தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, மிளிர், பாலாஜி மோகன் நடிக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
"பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கொஞ்சம் எடை கூடியது. வெப் சீரிசுக்காக நடிக்க அழைப்பு வந்ததும் கொஞ்சம் உடல் எடையை குறைக்க முடியுமா என்று கேட்டார்கள். கேரக்டருக்கா 2 மாதத்தில் 13 கிலோ எடை குறைத்தேன். சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறேன்" என்கிறார் ஐஸ்வர்யா.




