ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
எஸ்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ஜெகதீஸ் தயாரித்துள்ள படம் 'மெட்ராஸ்காரன்'. 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கி உள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகம் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா தத்தா, இயக்குனர் வாலியை தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்பு பெற்று கொடுத்தது தான் தான் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம். பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன். ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார். மிக அருமையாக இருந்தது, அந்த படத்தில் நான் நடித்தேன். படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் எனது நண்பர், மனிதாபிமானமிக்கவர். அவரிடம் என்னுடைய எல்லா விஷயத்தையும் சொல்வேன். அப்படித்தான் இந்த படத்தின் இயக்குனர் வாலி பற்றியும், அவரிடமிருந்த 'மெட்ராஸ்காரன்' கதை பற்றியும் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச தயாரிப்பாளர். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.