ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
எம்.ஆஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து, தயாரித்துள்ள படம் 'சக்ரா'. ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைபர் கிரைம் உலகை மையப்படுத்தி, திரில்லர் பாணியில் தயாராகி உள்ள இப்படம் பிப்., 19ல் வெளியாகிறது. முதன்முறையாக விஷாலின் படம் ஹிந்தியிலும் வெளியாகிறது.
விஷால் கூறுகையில், ''தியேட்டர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருவது மகிழ்ச்சி. “சக்ரா” பட டிரைலரை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். ஹிந்தி விநியோகஸ்தர்களிடம் இருந்தும் பாராட்டு கிடைத்தது நம்பிக்கை தந்துள்ளது. “சக்ரா கா ரக்சக்” என்ற பெயரில் ஹிந்தியில் வெளியிடுகிறோம். இந்தி மொழி ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.