மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஷங்கர் தயாரிப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2019ம் ஆண்டு ஆரம்பமான படம் 'இந்தியன் 2'. அதற்குப் பிறகு அப்படத்திற்குப் பல்வேறு தடைகள். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பில் ராட்சத கிரேன் விழுந்து மூவர் மரணமடைந்தனர். அதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஒரு வருட காலமாக படப்பிடிப்பு நடக்காமலேயே உள்ளது.
இதனிடையே, 'மாஸ்டர்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் அறிவிப்பும் வெளியானது. 'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.
நேற்று முன்தினம் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அதனால், 'இந்தியன் 2' படம் டிராப் ஆகிவிட்டதா என டுவிட்டர் தளத்தில் ரசிகர்கள் காரசார விவாதம் நடத்தினார்கள். 'இந்தியன் 2' டிரென்டிங்கில் கூட வந்தது. ஆனால், 'இந்தியன் 2' படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்கள் நடந்தால் போதும், மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
கமல்ஹசான் சமீபத்தில் தனது காலில் மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்து கொண்டார். இன்னும் சில மாதங்கள் அவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்களாம். அதனால் தான் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை என்கிறார்கள். மேலும் 'விக்ரம்' படப்பிடிப்பையும் தற்போது ஆரம்பிக்கும் எண்ணத்தில் கமல்ஹாசன் இல்லையாம்.
சட்டசபை தேர்தல் முடிந்த பிறகுதான் கமல்ஹாசன் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகலாம் என்கிறார்கள். எனவே, 'இந்தியன் 2' டிராப் ஆகவில்லை. அப்படத்தை முடித்த பிறகுதான் ஷங்கர் அடுத்த படத்திற்குப் போவார் என்று சொல்கிறார்கள்.