மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. 50 சதவீத இருக்கைகள் என்றாலும் படத்திற்கு எதிர்பார்த்ததை விட வசூல் அதிகமாகவே கிடைத்தது.
தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. கடந்த வாரம் 29ம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியானது. ஆனால், அதன்பின்னும் தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றுடன் முடிவடைந்த மூன்றாவது வார இறுதி நிலவரப்படி இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 180 கோடியும், வெளிநாடுகளில் 42 கோடியும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படம் லாபத்தைக் கொடுத்துள்ளது. ஹிந்தியில் வெளியான வட இந்தியாவில் மட்டும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் தியேட்டர் வெளியீடுகள் மூலம் மட்டும் சுமார் 25 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்கிறார்கள். அது மட்டுமல்லாமல் படத்தின் சாட்டிலைட் உரிமம் மூலம் 30 கோடி, ஓடிடி தளங்கள், இணையதளங்கள் 50 கோடி, இசை மற்றும் இதர உரிமைகள் 5 கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
மொத்த வருமானம் 332 கோடி ரூபாயில் படத்தின் பட்ஜெட் 150 கோடி போக தியேட்டர் வருமானம், மேலே குறிப்பிட்ட மற்ற வருவாய் என 100 கோடி முதல் 120 கோடி வரை கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதுதான் வினியோக வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்.
இந்த ஆண்டின் முதல் பிரம்மாண்ட வெற்றியாக 'மாஸ்டர்' அமைந்தது அடுத்து வர உள்ள படங்களுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுத்துள்ளது.