தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதன் காரணமாக தியேட்டர்களும் மூடப்பட்டன. நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதுவரையிலும் திட்டமிடப்பட்ட பல படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போடப்பட்டன.
அவற்றில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படமும் ஒன்று. கடந்த வருடம் மே மாதம் 1ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். அதற்குப் பிறகு சில சந்தர்ப்பங்களில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்றெல்லாம் தகவல் பரவியது. ஆனால், அவற்றை படத்தின் தயாரிப்பாளர் மறுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அது பற்றி தயாரிப்பாளர் தரப்பில் எதுவும் வெளியாகவில்லை. படத்தை சுமார் 50 கோடிக்கு முன்னணி ஓடிடி தளம் ஒன்றிற்கு விற்றுவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு இப்படத்தைத்தான் தியேட்டர்காரர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். தற்போது படம் ஓடிடி வெளியீடு என்பதால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இருந்தாலும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை.
அவர் தயாரித்துள்ள 'ஏலே' படத்தை பிப்ரவரி 12ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அதற்குப் பிறகே 'ஜகமே தந்திரம்' படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். முன்னரே அறிவித்தால் 'ஏலே' படத்தின் வெளியீட்டில் தியேட்டர்காரர்கள் ஏதாவது சிக்கலை ஏற்படுத்துவார்கள் என்பதுதான் காரணமாம்.