இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி படங்கள் மூலம் தரமான இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஹலீதா ஷமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. இது ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவையும், உரசலையும் பேசுகிறது. தந்தையாக சமுத்திரகனியும், மகனாக புதுமுகம் மணி கண்டனும் நடித்துள்ளனர்.
இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக இருந்தது. தியேட்டரில் வெளியான இரண்டாவது வாரம் ஓடிடி தளத்திலும் வெளியாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்து விட்டனர்.
ஒரு மாதத்திற்கு பின்பே ஓடிடியில் வெளியிடுவோம் என்று உத்தரவாக கடிதம் கொடுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கூறினார்கள். இதனை மறுத்த தயாரிப்பாளர்களான புஷ்கர், காயத்ரி ஆகியோர் படத்தை விஜய் டி.வியில் வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்தனர்.
அதன்படி நாளை (28ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.