ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் விஜய் 'கில்லி' மற்றும் 'போக்கிரி' படங்களின் மூலம் கமர்சியல் ஹீரோவாக உருவெடுத்தார். அந்த சமயத்தில் இயக்குனர் பேரரசு இயக்கிய 'திருப்பாச்சி' மற்றும் 'சிவகாசி' ஆகிய படங்களின் வெற்றிகள் அவரை முன்னணி ஹீரோ இடத்தில் நிலையாக அமர வைத்தது. அந்த சமயத்தில் இயக்குனர் ஷங்கரிடம் ஆஸ்தான உதவி இயக்குனராக பணியாற்றி வந்த முத்து வடுகு என்பவர் தனியாக பிரிந்து வந்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அதே சமயம் இயக்குனர் பேரரசு அவரது நண்பர் என்பதால் அவருக்கு உதவியாக 'திருப்பாச்சி, சிவகாசி' அதன்பிறகு அஜித் நடித்த 'திருப்பதி' ஆகிய படங்களில் பணியாற்ற துவங்கினார். இதில் சிவகாசி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது விஜய்யிடம் தன்னிடம் ஒரு கதை இருக்கிறது என்று கூற, விஜய்க்கும் அந்த கதை பிடித்து போய் தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனை அழைத்து கேட்கச் சொன்னார். அவருக்கும் கதை பிடித்து விட தயாரிப்பாளர் அப்பச்சன், 'முரசு' என்கிற பெயரில் இந்த படத்தை தயாரிப்பதாக முடிவானது.
முதன்முதலாக விஜய்யின் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கதாநாயகியாக அசின் மற்றும் முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே சில விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு எழுதிய கடிதத்தில் இப்போது வரை விஜயை நம்பித்தான் மற்ற இயக்குனர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால் தற்போது பேரரசு இயக்கிய இரண்டு படங்களின் வெற்றியால் பேரரசுவை நம்பி விஜய் இருப்பது போன்ற ஒரு பேச்சு உலா வருகிறது. இந்த நிலையில் பேரரசின் உதவியாளர் இயக்கும் படத்திலும் விஜய் நடித்தால் அவர்களது குழுவை நம்பித்தான் விஜய் இருக்கிறார் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது போல ஆகிவிடும் என்று கூறியிருந்தார்களாம்.
இந்த தகவல் எஸ்ஏசியின் காதுக்கு சென்றதும் அவருக்கும் ரசிகர்கள் சொல்வது சரி என்பது போல தோன்றியதால் இந்த விஷயத்தை விஜய்யிடம் சொல்ல அவரும் வேறு வழியின்றி தந்தையின் சொல்லை ஏற்றுக் கொண்டதால், இந்த படத்தின் வேலைகள் ஆரம்ப கட்டத்திலேயே நிறுத்தப்பட்டதாம். அதனைத் தொடர்ந்து விஜய்யின் கால்ஷீட் அப்படியே 'அழகிய தமிழ் மகன்' படத்திற்கு கொடுக்கப்பட ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக அந்த படத்திற்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த தகவலை கூறியுள்ள இயக்குனர் முத்து வடுகு, திருப்பாச்சியில் கூட விஜய் சென்னையில் உள்ள ரவுடிகளை மட்டும் தான் அழித்து ஒழிக்கிறார். ஆனால் இந்த முரசு திரைப்படம் அவர் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான விஷயத்தை சீர்திருத்துவது போல உருவாகி இருந்தது, இந்த படம் அப்போது உருவாகி வெளியாகி இருந்தால் அந்த சமயத்திலேயே விஜய் அரசியலுக்கு வந்திருக்கலாம், அவருக்கு அப்போதே மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்து இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.