டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தனது 35வது பிறந்தநாளை வியாழக்கிழமை கொண்டாடினார். அதில் அவரது நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டில்லியை சேர்ந்த பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவர் ஸ்ருதியின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர், "பிறந்தநாள் வாழ்த்துகள் இளவரசி" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ருதியும், சாந்தனு ஹசாரிகாவும் வெளியிடங்களில் ஒன்றாக சுற்றும் போட்டோக்களும் அதிகமாக வைராகி வருகிறது. இதன் மூலம் ஸ்ருதியும், சாந்தனுவும் காதலில் இருப்பதாக தெரிகிறது.
வெளிநாட்டவரான மைக்கேல் கோர்சல் என்கிற இசைக் கலைஞரை நீண்ட நாட்களாக ஸ்ருதிஹாஸன் காதலித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். சமீபத்தில் தான் காதலில் இருப்பதாக ரசிகர்களுடனான கலந்துரையாடலில் ஸ்ருதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




