இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் தெரிவித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு தனது வீட்டின் மாடிப்படியில் வழுக்கி விழுந்ததில் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அடிப்பட்டது. இதற்காக அப்போதே சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் ஒரு அறுவை சிகிச்சையும் அவருக்கு நடந்தது. அதன்பின் அரசியல், சினிமா என பிஸியாக இருந்தார். சில தினங்களுக்கு முன், ''மீண்டும் காலில் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் சில நாட்கள் ஓய்வில் இருக்க போகிறேன்'' என கமல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அந்த அறுவை சிகிச்சை இன்று(ஜன., 19) நடந்துள்ளது.
இதுகுறித்து கமலின் மகள்களும், நடிகைகளுமான ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் வெளியிட்ட அறிக்கை : ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் குமார் தலைமையில் அப்பாவிற்கு காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் அவரை பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். அதன்பின் சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பார். அனைவரது அன்பு, பிரார்த்தனைக்கு எங்களது நன்றி.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.