லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய்-விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் வெளியான, மாஸ்டர் திரைப்படம், ரஜினியின் 2.O பட வசூல் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை வெளியான தமிழ்ப்படங்களை விட, அதிக திரையரங்குகளில் மாஸ்டர் படம் திரையிடப்பட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.
அந்தவகையில் வெளியான முதல்நாளே அதிகம் வசூலித்த தமிழ்படங்களின் பட்டியலில், 2.83 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை (ரூ1.61 கோடி) வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது மாஸ்டர். இதற்கு முன்னதாக 2.3 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை (ரூ1.3௦ கோடி) வசூலித்து முதலிடத்தில் இருந்த ரஜினியின் 2.O படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.. மேலும் முதல்நாள் வசூலில் பாக்ஸ் ஆபீஸின் முதல் ஐந்து இடங்களில் விஜய்யின் மாஸ்டர், பிகில், சர்கார் ஆகிய மூன்று படங்களே இடம்பிடித்துள்ளன. ரஜினியின் 2.O மற்றும் கபாலி ஆகிய படங்கள் 2வது மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளன என்று அங்குள்ள பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தகவல் வெளியிட்டுள்ளது..