விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
இப்போதெல்லாம் புராண படங்களுக்கும், சரித்திர படங்களுக்கும் தான் மவுசு அதிகம். ஓடிடி தளங்களும் இதுமாதிரியான படத்தை விரும்பி வாங்குகின்றன. இதனால் தயாரிப்பும் அதிகமாகிறது. அந்த வரிசையில் அடுத்து உருவாகிறது சகுந்தலை புராணம்.
காளிதாசர் எழுதிய சகுந்தலையின் காதல் கதை மிகவும் புகழ்பெற்றது. இதனை அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமாதேவி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு, அர்ஜுன், சைனிகுடு உள்ளிட்ட படங்களை இயக்கிய குணசேகரன் இயக்குகிறார் .
சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சகுந்தலையாக நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். படத்துக்கு சகுந்தலம் என்று பெயர் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.
சகுந்தலையின் கதை: விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலையும், துஷ்யந்தனும் காதலிக்கிறார்கள். பின்னர் துருவாச முனிவர் சாபத்தால் அந்த காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி துஷ்யந்தனுடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது கதை.