விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
முன்னணி தெலுங்கு இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் வானம் படத்தை இயக்கியவர், தெலுங்கில் வேதம், காஞ்சி, கப்பர்ஸ் பேக், காம்யம் உள்பட பல படங்களை இயக்கியவர். கடைசியாக கங்கனா ரணவத் நடித்த மணிகர்னிகாக படத்தை இயக்கி அதிலிருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் என்.டி.ராமராவின் வரலாற்றை இரண்டு பாகமாக இயக்கினார். தற்போது தலைப்பு வைக்கப்பட்டாத இரண்டு படங்களை இயக்கி வருகிறார். ஒன்றில் ரவிதேஜாவும், மற்றொன்றில் பவன் கல்யாணும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் கிரிஷிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிரிஷ் இயக்கும் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் கிரிஷிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனால் படப்பிடிப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.