டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கிப்ட் என்ற படத்தில் போலீசாக நடித்துள்ளார் சோனியா அகர்வால். இந்த மாதம் இறுதியில் படம் ரீலீஸாகிறது. படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛நான் போல்டான போலீஸ் வேடத்தில் நடித்து இருக்கிறேன். போலீஸ் ரோல் என்பதால் அதற்கேற்றபடி என்னை தயார்படுத்தி அதை உணர்ந்து நடித்து இருக்கிறேன். யூனிபார்ம் இல்லாத போலீசாக வருகிறேன். பல படங்களில் ஏஞ்சல் ரோலில் நடித்துவிட்டேன். இப்போது மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறேன். அடுத்து ஜட்ஜ், அரசியல்வாதி வேடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறேன்.
நான் காதல் கொண்டேன் படம் பண்ணும்போது, அது சின்ன பட்ஜெட் படம். ஆனால் பெரிதாக வெற்றி பெற்றது. எப்போதும் கதைதான் ஜெயிக்கும். காதல் கொண்டேன் பார்ட் 2 வர பிளான் இருக்குது. அது குறித்து என்னிடம் பேசினார்கள். எனக்கு சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய ஐடியா இருக்குது. இப்போதைக்கு அரசியலுக்கு வர ஐடியா இல்லை. விஜய் கட்சியிலும் சேருவது குறித்து யோசிக்கவில்லை'' என்றார்.




