15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்து இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க 2000 ஆரம்ப காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்த அப்பாஸ், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 11 வருடங்களுக்கு பிறகு அப்பாஸ் மீண்டும் படங்களில் நடிப்பதை தொடங்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் படத்தை தொடர்ந்து தற்போது ‛பராசக்தி' படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.