‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
கடந்த 2013ம் ஆண்டில் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த படம் 'திரிஷ்யம்'. இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்தனர். தமிழில் கமல்ஹாசன் 'பாபநாசம்' எனும் பெயரில் ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் 'திரிஷ்யம் 2' கொரோனா காலகட்டத்தினால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஹிந்தி, தெலுங்கிலும் ரீ-மேக் ஆனது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரிஷ்யம் 3ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பை வருகின்ற செப்டம்பர் 18ம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக மலையாள சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.