டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஹரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ.அழகு பாண்டியன் தயாரிக்கும் படம் 'நறுவீ'. அறிமுக இயக்குநர் சுபாரக் இயக்குகிறார். டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, ஆகியோர் நடித்துள்ளனர். அஸ்வத் இசையமைத்துள்ளார். ஆனந்த் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 29ஆம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் சுபாரக் கூறும்போது "மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம். போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது" என்றார்.




