டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவின் முன்னணி டிசைனர் குமார். தென்னிந்திய சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இவர் போஸ்டர் மற்றும் டிசைனிங்கில் பணியாற்றியவர். 67 வயதான குமார் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார்.
கே. பாலசந்தர், பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, விக்ரம், எஸ்ஜே சூர்யா, தரணி உள்ளிட்ட பலருடன் இணைந்து குமார் பணியாற்றியுள்ளார். 'விக்ரம்' முதல் 'சபாஷ் நாயுடு' வரை கமல்ஹாசனின் படங்களுக்கு அவர் தொடர்ந்து பணியாற்றி உள்ளார். ராஜ்கமல் பிலிம்சின் ஆஸ்தான டிசைனராக பணியாற்றினார் . குமாரின் மறைவுக்கு திரை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




