பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? | பிளாஷ்பேக் : லலிதா பத்மினிக்காக உருவான நாவல் | ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா? | அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' |
இந்தியத் திரையுலகத்தில் நாளை இரண்டு படங்கள் மோதிக் கொள்ள உள்ளன. ஒன்று ஹிந்தியில் உருவான 'வார் 2', மற்றொன்று தமிழில் உருவான 'கூலி'. இரண்டு படங்களுமே பெரிய பட்ஜெட் படங்கள், இரண்டு படங்களிலும் மல்டி ஸ்டார்கள் நடித்துள்ளார்கள்.
இந்தப் படங்களின் ஆந்திரா, தெலங்கானா முன்பதிவுகளும் நேற்று இரவு முதல் ஆரம்பமாகி தற்போது மொத்தமாக முன்பதிவு நடந்து வருகிறது. டிக்கெட்டை முன்பதிவு செய்யும் ஆன்லைன் இணையதளங்களில் ரசிகர்கள் ஒரு வித்தியாசத்தைப் பார்க்கலாம்.
'வார் 2' படத்திற்கான முன்பதிவு பக்கத்தில், “2டி, ஐமேக்ஸ் 2டி, 4டி எக்ஸ், டால்பி சினிமா 2டி, ஐஸ்' என விதவிதமான திரையீடு தொழில்நுட்பங்களில் இந்தப் படத்தைப் பார்க்கும் வசதிகளுடன் முன்பதிவு நடைபெறுகிறது. ஆனால், 'கூலி' படத்திற்கான முன்பதிவு பக்கத்தில், வெறும் “2டி' வடிவில் மட்டுமே படத்தைப் பார்க்கும் வசதியுடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
'வார் 2' படம் '2டி' தவிர மற்ற தொழில்நுட்ப திரையீடுகளில் 'எக்ஸ்க்ளூசிவ் ஒப்பந்தம்' ஒன்றைப் போட்டுள்ளது. வேறு எந்த படத்தையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மேலே குறிப்பிட்ட மற்ற வடிவங்களில் திரையிடக் கூடாது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.
இது வியாபார ரீதியாக 'தனிப்பட்ட ஒப்பந்தம்' என்று சொன்னாலும் போட்டி நிறைந்த சினிமா உலகத்தில் ஒருவர் மட்டுமே 'ஏகபோகம்' ஒப்பந்தம் செய்வதை கேள்வி எழுப்பும் ஒரு ஒப்பந்தம் ஆகும்.
இதனால், 'கூலி' படத்தை '2 டி' தவிர 'ஐமேக்ஸ், 4 டிஎக்ஸ், டால்பி சினிமா' உள்ளிட்ட வடிவங்களில் ரசிகர்கள் இரண்டு வாரங்களுக்குப் பார்ப்பதைத் தடுக்கிறது. இது குறித்து தமிழ்த் திரைப்படத் துறையினர் எந்த ஒரு எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.