மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு சாய் அபயன்கர் இசையமைக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் உடனடியாக டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்நிறுவனத்துடன் இணைந்து கோல்ட் மைன்ஸ் நிறுவனமும் தயாரிக்கின்றனர். விரைவில் இந்த படத்திற்கான பணிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கும் இசையமைக்க சாய் அபயன்கர் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தொடர்ந்து இரண்டு சிவகார்த்திகேயன் படங்களுக்கு சாய் அபயன்கர் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.