தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛கூலி'. ஆக., 14ல் ரிலீஸாகிறது. இந்த படம் டைம் டிராவல் கதைக்களம், ரஜினி கேரக்டர் டைம் டிராவல் செய்கிறது. ஒரு சேரில் உட்கார்ந்தால் மனிதர்கள் மாயமாவர்கள். அந்த சேரை சுற்றிதான் கதை நடக்கிறது என்று தகவல் கசிகின்றன.
இது குறித்து லோகேசிடம் கேட்டபோது, ‛‛நானும் இப்படிப்பட்ட கதைகளை படித்தேன். ஆனால், படம் ரிலீஸ் ஆனபின் ஆச்சரியம் இருக்கிறது'' என பதில் அளித்துள்ளார்.
கதைப்படி சத்யராஜ் ஒரு கடிகார பேக்டரியில் வேலை செய்கிறார். அவர் சில ஆராய்ச்சி செய்கிறார். டைம் டிராவல் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை கைப்பற்ற போட்டி என்று கூறப்படுகிறது.
இதற்குமுன்பு வெங்கட் பிரபுவின் ‛மாநாடு', சூர்யா நடித்த ‛24', விஷ்ணு விஷால் நடித்த ‛இன்று நேற்று நாளை', சந்தானம் நடித்த ‛டிக்கிலோனா', விஷால் நடித்த ‛மார்க் ஆண்டனி' மற்றும் ‛ஜாங்கோ' போன்ற படங்கள் தமிழில் டைம் டிராவல் சப்ஜெக்ட்டில் வந்துள்ளன.