வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் இன்று(ஜூலை 25) வெளியாகியுள்ள படம் 'தலைவன் தலைவி'. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு சுமார் 1000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆனால், படத்தின் தெலுங்குப் பதிப்பான 'சார் மேடம்' படம் இன்று வெளியாகவில்லை. அதன் ஆன்லைன் முன்பதிவு கூட திறக்கப்படவில்லை. படம் இன்று வெளியாகிறதா இல்லையா என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பவன் கல்யாண் நடித்து நேற்று வெளியான 'ஹரிஹர வீரமல்லு' படத்துடன் இப்படத்தை போட்டியாக வெளியிடுவதை படக்குழு கடைசி நேரத்தில் தவிர்த்துள்ளதாகச் சொல்கிறார்கள். விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருக்குமே தெலுங்கில் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் பட வெளியீடு குறித்து எதுவுமே சொல்லாமல் விட்டுள்ளது ஆச்சரியம்தான். அடுத்த வாரம் வெளியாகுமா இல்லை இன்னும் தள்ளிப் போகுமா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.




