பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் |
பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் ஜுலை 25ம் தேதி வெளியாக உள்ள படம் 'தலைவன் தலைவி'. இப்படத்தின் இசை வெளியீடு இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. அந்த நிகழ்வின் ஒளிபரப்பு உரிமையை தனியார் டிவிக்குக் கொடுத்துவிட்டார்கள். அதனால், நேற்று இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விஜய் சேதுபதி, அவருக்கும் இயக்குனர் பாண்டிராஜுக்கும் இதற்கு முன்பு சண்டை ஒன்று இருந்ததாகவும், அதனால், இருவரும் சேர்ந்து படம் பண்ணக் கூடாது என்ற முடிவில் இருந்ததாகவும் குறிப்பிட்டார். ''மிஷ்கின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதியை சந்தித்தபோது அவரைப் பார்ப்பதையும் தவிர்க்க முயன்றேன், ஆனால், அன்றுதான் அவருடன் பேசி மீண்டும் நட்பானேன். அதற்குப் பிறகு தான் எழுதிய 'தலைவன் தலைவி' கதைக்கு விஜய் சேதுபதிதான் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நேரில் சந்தித்து கதை சொல்லி இந்தப் படத்தை எடுத்து முடித்தோம்'' என இயக்குனர் பாண்டிராஜ் பேசினார்.
''எங்களுக்குள் ஒரு சண்டை இருந்தது உண்மைதான், அது பிரிவையும் ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில் அதை மறந்து ஒன்று சேர்ந்தோம். இனி, தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்'' என இருவருமே பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கான பதிலும் குறிப்பிட்டார்கள்.
நேற்றைய நிகழ்ச்சியில் அந்த சண்டை பற்றி அவர்கள் பேசியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், பொதுவெளியில் அதைப் பற்றிப் பேச வேண்டும் என நாங்கள்தான் முடிவெடுத்தோம் என விஜய் சேதுபதி கூறினார். நேற்றைய நிகழ்ச்சியில் தொடர்ந்து அவர்களுக்கு இடையிலான சண்டை பற்றியே கேள்விகள் எழுப்பப்பட்டன.
கணவன், மனைவிக்கு இடையில் உள்ள சிக்கல்களை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும் படம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு விவாகரத்து செய்வது குறித்து தம்பதிகள் யோசிப்பார்கள் என்று பாண்டிராஜ் பேசினார். அப்படியான ஒரு குடும்பப் படத்திற்குத் தேவையற்ற ஒரு நெகட்டிவ் பேச்சை பாண்டிராஜ், விஜய் சேதுபதி உருவாக்கிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்குள் நடந்த சண்டை என்ன, எதனால் பிரிந்தார்கள் என அடுத்த சில நாட்களுக்கு யு டியூப் தளங்களில் பலர் பேசும் பல கதைகளை நாமும் கேட்கலாம்.